கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் மன்ற தொடக்க விழா

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது.

Update: 2022-08-24 15:39 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் எந்திரவியல் துறை பொறியியல் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் எ.ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். துறை (பொறுப்பு) தலைவர் வி.பால்துரை முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் கடற்படை அதிகாரியும், டி.வி.எஸ். குழும நிறுவனங்களின் யிற்சியாளர் ஆர்.அருணாச்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படை போன்ற பாதுகாப்பு துறையில் எந்திரவியல் துறையில் பட்டயபடிப்பு பயிலும் மாணவர்களுக்கு உள்ள வேலை வாய்ப்புகள், அதற்கான தேர்வு முறைகள் பற்றியும் விளக்கி பேசினார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம் வழி காட்டுதலில் கல்லூரி முதல்வர், எந்திரவியல் துறை தலைவர் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்