இல்லம் தேடி கல்வி மையங்கள் திறப்பு விழா

இல்லம் தேடி கல்வி மையங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-04-04 19:59 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பாப்பையநாயக்கர்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி மையங்கள் திறப்பு விழா தலைமை ஆசிரியர் ஜோதிமணிராஜன் தலைமையில் நடைபெற்றது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜோதிமுருகன், பள்ளி மேலாண்மை குழு தலைவி அமுதவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் வரவேற்று புதிய தன்னார்வலர்களை அறிமுகம் செய்து வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் மருதக்காளை மையங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இப்பள்ளியின் உயர் தொடக்க நிலை மாணவர்களில் கற்றலில் குறைபாடுடையவர்களுக்கு இந்த மையங்கள் பயனுள்ளதாக அமையும். மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

விழாவில் மாவட்ட ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மாடசாமி, ஆசிரியப்பயிற்றுனர்கள் ஈஸ்வரன், முத்துராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினா். தன்னார்வலர்கள் சுபாலட்சுமி, ராமலட்சுமி, மல்லிகா, அருணாதேவி, ஜோதிலட்சுமி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்