வளையக்கரணை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

வளையக்கரணை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திறந்து வைத்தார்.

Update: 2023-04-21 09:10 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வளையக்கரணை ஊராட்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் கலந்து கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.

இதில் நெல் கொள்முதல் கண்காணிப்பு அலுவலர் லோகநாதன், உதவியாளர் பூவரசன், மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ரேவதி சங்கர், சந்திரா கோவிந்தராஜ், கா. அமரன், கே. கேசவன், ராஜேஸ்வரி கோதண்டபாணி, நாட்டரசன்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி சாம்பசிவம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காசி, நெல் கொள்முதல் கமிட்டி நிர்வாகிகள் எஸ். சந்திரன், ஆர்.மணி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் உமையாள்பரணச்சேரி, வட்டம்பாக்கம், காஞ்சிவாக்கம், நாட்டரசன்பட்டு, செரப்பணஞ்சேரி, சிறுவஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு கிராமத்திலிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கொண்டு வரும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்