சி.கே.மங்கலம் புனித பேதுரு ஆலய திறப்பு விழா

சி.கே.மங்கலம் புனித பேதுரு ஆலய திறப்பு விழா நாளை நடக்கிறது.

Update: 2023-02-17 18:43 GMT

தொண்டி, 

சி.கே.மங்கலம் புனித பேதுரு ஆலய திறப்பு விழா நாளை நடக்கிறது.

புனித பேதுரு ஆலயம்

திருவாடானை அருகே உள்ள சி.கே.மங்கலத்தில் பிரசித்தி பெற்ற புனித பேதுரு ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் அழகிய வேலைப்பாடுகளுடன், புதிய வடிவங்களில் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட புனித பேதுரு ஆலய திறப்பு, விழா மற்றும் புனித படுத்தும் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணி அளவில் நடைபெற உள்ளது. சி.கே.மங்கலம் புனித பேதுரு ஆலய பங்கு தந்தை அருட்திரு சாமு இதயன் தலைமையில் நடைபெறும்.

இந்த விழாவில் கோவை தொழில் அதிபர் ஜான் கென்னடி புதிய கோபுரத்தை திறந்து வைக்கிறார். ஆலயத்தை சென்னை தொழில் அதிபர் எல்.அமல்ராஜ், சென்னை தொழில் அதிபர் எம்.எழிலரசன் ஆகியோர் திறந்து வைக்கின்றனர். மதுரை ஜெ.எஸ் பி.ஆர். கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.பவுல் செங்கோல் ராஜ் பீடத்தை திறந்து வைக்கிறார். சென்னை வக்கீல் ஏ.பிரான்சிஸ் இளங்கோ நன்றி கூறுகிறார்.

சிறப்பு திருப்பலி

சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் செ.சூசை மாணிக்கம் ஆலயத்தை அர்ச்சிப்பு செய்து புனிதபடுத்துகிறார். அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. முன்னதாக பங்கு இறை மக்கள் சார்பில் ஆயர் சூசை மாணிக்கத்திற்கு வரவேற்பு விழா நடைபெறுகிறது. இதனையொட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை சாமு இதயன் தலைமையில் அருட் சகோதரிகள் பங்குபேரவையினர், பங்கு இறை மக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்