அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா
விக்கிரமசிங்கபுரம் அருகே அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அருகே ஆலடியூரில் அம்பை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நடந்தது. இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார்.
விழாவில் மணிமுத்தாறு நகரப்பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிவன்பாபு, நகரப்பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கிறிஸ்டோபர்தாஸ், சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.