ரூ.1 ½ கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1 ½ கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் திறப்பு

Update: 2022-12-07 18:52 GMT


திருவாருர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1½ கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கானொலிக்காட்சி மூலம் விவசாயிகள் பயன்பாட்டுக்கு ஒழுங்குமுைற விற்பனை கூடத்தை திறந்து வைத்தாா். இதைத்தொடர்ந்து திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்ரமணியம், உதவி கலெக்டர் சங்கீதா, நகர் மன்ற உறுப்பினர் பிரகாஷ், வேளாண்மை இணை இயக்குநர் இயக்குனர் ஆசிர் கனகராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஏழுமலை, வேளாண்மை துணை இயக்குனர் (வணிகம்) லெட்சுமிகாந்தன், திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு, வேளாண்மை உதவி இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்து கட்டிடத்தை பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்