ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் திறப்பு விழா

கயத்தாறு அருகே ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-05-06 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு யூனியன் வடக்கு இலந்தைகுளம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கலையரங்கம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

விழாவில் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருடன் கயத்தாறு தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி பாண்டியன், கயத்தாறு நகரச் செயலாளர் சுரேஷ் கண்ணன், மற்றும் அரசு ஒப்பந்ததாரர் வெள்ளப்பாண்டியன், மாரி முருகன், முத்துப்பாண்டி உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக காளியம்மன் கோவில் கொடை விழாவில் சாமி தரிசனம் செய்து விட்டு, அருகில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்