மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு கூட்டம்
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு கூட்டம் நடந்தது.;
கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு மற்றும் முதல் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட திட்டக்குழு தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன் தலைமை தாங்கி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கு பதவியேற்பு செய்து வைத்தார். கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி வரவேற்றார்.
இக்கூட்டத்தில் தேன்மொழி, கார்த்திக், அலமேலு, நந்தினிதேவி, கண்ணையன், நல்லமுத்து, இந்திரா, ரமேஷ் (கரூர் மாநகராட்சி), ஜாபர் அலி (பள்ளப்பட்டி நகராட்சி), தமிழரசன் (மருதூர் பேரூராட்சி), ராதிகா (கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி) ஆகிய 11 பேர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.