'ஸ்மார்ட் அக்ரி' திட்ட தொடக்க விழா

‘ஸ்மார்ட் அக்ரி’ திட்ட தொடக்க விழா

Update: 2023-02-24 18:45 GMT

குன்னூர்

நவீன தொழில்நுட்பத்துடன் தேயிலை விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் 'ஸ்மார்ட் அக்ரி' என்ற திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 193 கிராமங்களில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெறுவார்கள். இந்த திட்ட தொடக்க விழா, குன்னூர் உபாசி அரங்கில் நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் விவசாயிகளுக்கு தேயிலை எந்திரங்களை வழங்கி பேசும்போது, 'ஸ்மார்ட் அக்ரி' திட்டத்தின் மூலம் மண்ணின் தரம், பூச்சி தடுப்பு மேலாண்மை மற்றும் அனைத்து காரணிகள் குறித்த நுண்ணறிவு விவசாயிகளுக்கு வழங்கப்படும். உலகளவில் நிலவும் வர்த்தக போட்டிக்கு விவசாயிகள் தங்களை தயார்படுத்தி ெகாள்ள வேண்டும். இதற்கு இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும் என்றார். தேயிலை வாரிய செயல் இயக்குனர் டாக்டர் முத்துகுமார் கூறும்போது,

நவீன தேயிலை தொழில் நுட்பங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் இதுபோன்ற திட்டங்களை பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும் என்றார். இதில் ஆர்.டி.ஓ. பூஷ்ணகுமார், தாசில்தார் சிவக்குமார் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்