திருவண்ணாமலையில் வருவாய் கிராம ஊழியர் சங்க கட்டிட திறப்பு விழா

திருவண்ணாமலையில் வருவாய் கிராம ஊழியர் சங்க கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-06-01 18:26 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் வட்ட சங்க கட்டிடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. வட்ட தலைவர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் ரவி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் திருமலைவாசன் கலந்துகொண்டு சங்க கட்டிடத்தை திறந்து வைத்து பேசினார். மாநில பொதுச் செயலாளர் ரவி சங்க கொடியினை ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் பெருமாள் சங்க கட்டிடத்தின் கல்வெட்டை திறந்து வைத்தார்.

விழாவில் முன்னாள் மாநில தலைவர் அன்சர் சங்க கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் சங்கர், மாவட்ட செயலாளர் ரமணன், மாவட்ட பொருளாளர் மெய்யழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்