உயர்கோபுர மின்விளக்கு தொடக்க விழா
பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் உயர்கோபுர மின்விளக்கு தொடக்க விழா நடந்தது.
வாய்மேடு:
வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தொகுதிமேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட உயர்கோபுர மின் விளக்கு தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு பஞ்சநதிக்குளம் மேற்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுரு பாண்டியன் தலைமை தாங்கி உயர்கோபுர மின்விளக்கை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி ராமநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.