தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.;

Update: 2023-10-03 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் திட்டத்தின் கீழ் லாரி, பிக்கப்வேன், டாடா எய்ச்சர், டிராக்டர் வாங்க வற்புறுத்தி வருகின்றனர். இதனை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என கோரி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 132 கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களும் ராமநாதபுரம் கூட்டுறவு மண்டல இணை பதிவாளரை சந்தித்து ஏற்கனவே, வாங்கியுள்ள உபகரணங்கள் மற்றும் வாகனங்களின் சாவிகளை ஒப்படைக்கவும், அதனை தொடர்ந்து சங்க பணியாளர்கள் அனைவரும் ஒட்டுமொத்த தொடர் விடுப்பில் செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி ராமநாதபுரத்தில் எந்திரம் மற்றும் உபகரணங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டம் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில், செயலாளர் கிருஷ்ணன், பொருளாளர் குஞ்சரபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. துணை தலைவர்கள் திருமால், கோபால், இணை செயலாளர்கள் சாமியாண்டி, ரேவதி மற்றும் செய்தி தொடர்பாளர் பொற்செல்வன் உள்பட மாவட்டத்தில் உள்ள 132 கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் கலந்து கொண்டு சாவிகளை ஒப்படைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்