தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள்-சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள்-சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-04 19:29 GMT

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். இதில் மாநில தலைவர் மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 'பயிர்க்கடன்கள் தொடர்பாக சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் விலக்கிக்கொள்ளவேண்டும், சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் ஒன்றிய தலைவர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது. தேர்தல் கால வாக்குறுதியில் கூறியபடி சத்துணவு ஊழியர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியத்தை நீக்கி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருவெறும்பூரில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். இதில் திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் என அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்