சிவகாசி பஜாரில் வாகனங்களை நிறுத்த போதிய இடம் ஒதுக்காத நிலை

சிவகாசி பஜாரில் வாகனங்களை நிறுத்த போதிய இடம் ஒதுக்காத நிலை உள்ளது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-24 20:47 GMT

சிவகாசி, 

சிவகாசி பஜாரில் வாகனங்களை நிறுத்த போதிய இடம் ஒதுக்காத நிலை உள்ளது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதிய இடம் இல்லை

சிவகாசி நகரப்பகுதி நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் நிலையில் ரத வீதிகள் மற்றும் பஜார் பகுதியில் வாரம் ஒரு கட்டிடம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இங்குள்ள வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடம் இல்லை.

ஒரு சில கட்டிடங்களை தவிர மற்ற கட்டிடங்களில் வாகனங்களை நிறுத்த போதிய இடம் ஒதுக்கவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கு வரும் வாகனங்களும் கிடைக்கும் பகுதியில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.

அபராதம்

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார்கள் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் தட்டிக்கழிக்கும் நிலை தொடர்கிறது எனவும், இதற்கிடையில் சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு சிவகாசி டவுன் போலீசார் விதிமீறல் என கூறி அபராதம் வசூலிக்கும் நிலை தொடர்கிறது எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டரிடம் புகார் தெரிவித்த போது உரிய நபரிடம் விசாரணை நடத்துகிறேன். போலீசார் தவறு செய்தது உறுதி ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சிவகாசி நகரப்பகுதியில் வாகனங்களை நிறுத்த எங்கும் இடம் ஒதுக்கப்படாத போது 'நோ பார்க்கிங்' ஏரியா என்று எதுவும் இல்லை.

அறிவுறுத்தல்

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் கடை வீதி பகுதியில் தான் வாகனங்களை நிறுத்த முடியும். இதனை சரியாக புரிந்து கொள்ளாத போலீசார் 'நோ பார்க்கிங்' ஏரியாவில் வாகனங்களை நிறுத்தியதாக ரூ.500 அபராதம் விதித்து வருகிறார்கள். ஒவ்வொரு போலீசாருக்கும் ஒரு நாளைக்கு எத்தனை வழக்குகள் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் போலீசார் சாலை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களுக்கும் அபராதம் விதித்து வருகிறார்கள்.

இதுபோன்ற செயல்களை போலீசார் தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் நிர்வாகம் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்