தொழிலாளி கொலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் கைது

தூத்துக்குடியில் தொழிலாளி கொலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-01 18:45 GMT

தூத்துக்குடியில் கூலித் தொழிலாளி கொலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அடித்துக் கொலை

தூத்துக்குடி சின்னகண்ணுபுரத்தை சேர்ந்தவர் தங்கதுரை. இவருடைய மகன் ஜெயக்குமார் (வயது 45). கூலித் தொழிலாளி. இவர் குறிஞ்சிநகரை சேர்ந்த முருகன் மகன் சரவணன் (வயது 25) என்வரிடம் ஒரு மோட்டார் சைக்கிளை ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்தாராம். அந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்ததால், சரவணன், முருகன் ஆகியோர் ஜெயக்குமாரை வீட்டுக்கு அழைத்து சென்று தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார். இதற்கு சரவணனின் தாய் பொன்வைரவி ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது.

கைது

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணன், அவரது தந்தை முருகன், தாய் பொன்வைரவி ஆகியோர் கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்