பெண்ணாடத்தில், அ.தி.மு.க. பேனர் கிழிப்பு
பெண்ணாடத்தில் அ.தி.மு.க. பேனர் கிழித்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணாடம்,
பெண்ணாடத்தில் அண்ணாவின் 115-வது பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடத்துவதற்காக பஸ் நிலையம் அருகில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அதனை மர்மநபர்கள் கிழித்து, சேதப்படுத்தியுள்ளனர். இதை பார்த்த அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நல்லூர் மாணவரணி செயலாளர் வாசு.தங்கம் பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேனரை கிழித்து சேதப்படுத்திய நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.