வலங்கைமானில், மனு கொடுக்கும் போராட்டம்

100 நாள்வேலை திட்டத்தை அமல்படுத்தக்கோரி வலங்கைமானில், மனு கொடுக்கும் போராட்டம்

Update: 2023-07-27 18:45 GMT

வலங்கைமான்:

வலங்கைமான் பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரூராட்சியில் மனு கொடுக்கும் போராட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்தது. இந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத்தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர் கந்தசாமி, சி.ஐ.டி.யூ. மாவட்டத்தலைவர் அனிபா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரியிடம் வழங்கினா்.

Tags:    

மேலும் செய்திகள்