விருத்தாசலத்தில் கடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் செல்போன்கள் திருட்டு

விருத்தாசலத்தில் கடை பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் செல்போன்கள் திருடு போனது.;

Update: 2022-10-14 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் புது குப்பம் மாணிக்கவாசகர் நகரை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 40). இவர் விருத்தாசலம் ஆலடி சாலையில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் அன்பழகன் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது, கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்த அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த 13 விலையுயர்ந்த செல்போன்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கம், சார்ஜர்கள் உள்ளிட்டவைகளை காணவில்லை. அவற்றை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருடுப்போன செல்போன்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்