விளாத்திகுளம் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விளாத்திகுளம் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.

Update: 2022-10-18 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், சந்தனம், சீயக்காய், இளநீர், பச்சரிசி, தேன், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

தொடர்ந்து பூ, வில்வ இலை, வடை உள்ளிட்டவைகளைக் கொண்டு மாலை சாற்றி, காலபைரவருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்