வெம்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை
வெம்பூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும்.
தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர் துணை மின்நிலையத்தில் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இதனால் வெம்பூர், மெட்டில்பட்டி, அழகாபுரி, அயன்கரிசல்புரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்து உள்ளார்.