வேதாரண்யத்தில், குப்பைகள் சேகரிக்கும் பணி
வேதாரண்யத்தில், குப்பைகள் சேகரிக்கும் பணி நடந்தது.;
வேதாரண்யம்,மே.24-
வேதாரண்யம் நகராட்சியில் 6,7,9 ஆகிய வார்டுகளில் 'என் வாழ்க்கை என் சுத்தமான நகரம்' திட்டத்தின் கீழ் குப்பைகளை சேகரிக்கும் பணி நடந்தது. இந்த பணியை நகர மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். குப்பைகளை துணி, புத்தகம், பொம்மை, பிளாஸ்டிக் என தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 'என் வாழ்க்கை என் சுத்தமான நகரம்' திட்டம் குறித்து உறுதிமொழியை பொதுமக்கள் எடுத்துக் கொண்டனர்.