வலங்கைமானில், காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

வலங்கைமானில், காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை

Update: 2022-08-13 18:24 GMT

வலங்கைமான்

75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு வலங்கைமானில் காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்தினர். முன்னதாக வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த பாதயாத்திரை கும்பகோணம் ரோடு, கடைத்தெரு, தொழுவூர், ஆலங்குடி வழியாக வந்து நீடாமங்கலம் கடைத்தெருவில் முடிவடைந்தது. இதற்கு திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் துரைவேலன் தலைமை தாங்கினார். வலங்கைமான் நகர காங்கிரஸ் தலைவர் ராஜி, வட்டார தலைவர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் அன்புவீரமணி, காங்கிரஸ் தொழிற்சங்க பிரிவு மாவட்ட தலைவர் குலாம் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்