வைப்பார் கிராமத்தில்மாட்டு வண்டி பந்தயம்
வைப்பார் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது, இதில் பெரியமாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு ஆகிய 3 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.
பெரிய மாட்டு வண்டி வைப்பார் கிராமத்திலிருந்து புளியங்குளம் கிராமம் வரையிலும், சின்ன மாட்டு வண்டி, குளத்தூர் வரையிலும், பூஞ்சிட்டு சுப்பிரமணியபுரம் விலக்கு வரையும் என எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு பந்தயம் நடத்தப்பட்டது.
இதில், 62 ஜோடி மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இப்பந்தயத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பந்தயத்தில் தூத்துக்குடி, நெல்லை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாட்டுவண்டிகள் வெற்றி பெற்றன. இதனையடுத்து வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்கத்தொகை, ஆட்டு கிடாய்கள், எல்.இ.டி.டி.வி. உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டன.