உத்தமபாளையத்தில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல்

உத்தமபாளையத்தில் சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்

Update: 2022-06-25 15:00 GMT

உத்தமபாளையத்தில், கம்பம் செல்லும் பிரதான சாலை மற்றும் உத்தமபாளையம் பஸ் நிலைய பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. பின்னர் தற்போது வரை சாலை அமைக்கும் பணி நடைபெறவில்லை. இந்த சாலையில் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருப்பதால் சாலை முழுவதும் தூசி பறக்கிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சாலையை சீரமைக்ககோரி பொதுமக்கள் ஏராளமானோர் பஸ் நிறுத்த பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்ததை நடத்தினர். அப்போது சாலை பணி விரைவாக தொடங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்