உடன்குடி பேரூராட்சியில்உதவி இயக்குனர் திடீர் ஆய்வு
உடன்குடி பேரூராட்சியில் உதவி இயக்குனர் திடீர் ஆய்வு நடத்தினார்.
உடன்குடி:
நெல்லை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் நேற்று உடன்குடி பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலக கட்டிடத்தை பராமரிப்பு செய்ய அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து உடன்குடி பஸ் நிலைய வளாகத்தில் உள்ள கட்டண சுகாதார வளாகம் மற்றும் பொது சுகாதார வளாகத்தை தூய்மையாக பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பஸ் நிலைய வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என எச்சரித்த அவர், திடக்கழிவு மேலாண்மை திடலில் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார். தேவையான பராமரிப்பு மற்றும் நவீன மயமாக்குதல் குறித்து அறிவுரை வழங்கினார். பேரூராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகளை குறிப்பிட்ட நாளில் முடிக்க வேண்டும் என்றும் அதில் எவ்வித முறைகேட்டுக்கும் இடம் கொடுக்க கூடாது என்றும் கண்டிப்புடன்கூறினார். இந்த ஆய்வின்போது பேரூராட்சி அலுவலர் பாபு, தலைவர் தலைவர்ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி மற்றும் ஊழியர்கள் உடன் சென்றனர்.