தூத்துக்குடியில்தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிப்பு

தூத்துக்குடியில் தனியார் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறித்த சிறுவன் சிக்கினான்.

Update: 2023-02-06 18:45 GMT

தூத்துக்குடி பழைய காயலைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). தனியார் நிறுவன ஊழியர். இவர் தூத்துக்குடி, சத்யா நகர் பகுதியில் நடந்து வந்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த 2 பேர் ரமேசின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். ரமேஷ் சத்தம் போட்டதால், அந்த வழியாக வந்த பொதுமக்கள் 2 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது 16 வயது சிறுவன் ஒருவர் மட்டும் பிடிபட்டார். சிறுவனை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

----

Tags:    

மேலும் செய்திகள்