தூத்துக்குடியில்டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மாதிரித் தேர்வு
தூத்துக்குடியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மாதிரித் தேர்வு நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2 மெயின் தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வில் சுமார் 200 மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த தேர்வை தூத்துக்குடி அரிமா சங்க செயலாளர் திவாகர் தொடங்கி வைத்தார். காலையில் தமிழ் தகுதித் தேர்வும், மாலையில் பொது அறிவுத் தேர்வும் நடந்தன. தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட மைய நூலகர் மா.ராம்சங்கர் செய்து இருந்தார்.