தூத்துக்குடியில்தீக்குளித்த மூதாட்டி சாவு

தூத்துக்குடியில் தீக்குளித்த மூதாட்டி இறந்து போனார்.

Update: 2023-01-20 18:45 GMT

தூத்துக்குடி தாமஸ்நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் வெர்ஜின் (வயது 60). சம்பவத்தன்று இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தீக்குளித்து விட்டாராம். இதில் உடல் கருகிய வெர்ஜின் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்