தூத்துக்குடியில்கஞ்சா விற்ற முதியவர் சிக்கினார்
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற முதியவர் கைதுசெய்யப்பட்டார்.;
தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த தூத்துக்குடி சிவந்தாகுளத்தை சேர்ந்த அந்தோணிமுத்து மகன் செல்வம் என்ற செல்வின் செல்வம் (வயது 64) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் செல்வம் என்ற செல்வின் செல்வத்தை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வம் மீது ஏற்கனவே தென்பாகம் போலீசில் 4 கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கத