தூத்துக்குடியில்சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் நேற்று சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் வேலுச்சாமி, ஜான்சன், குமார், வேல்பாண்டி, அண்ணாத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செம்புலிங்கம் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் மா.சண்முகராஜா கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை கேட்டு கொடுத்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, கருணை அடிப்படையில் அரசுப்பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அண்ணாத்துரை நன்றி கூறினார்.