தூத்துக்குடியில் வாசிக்கும் பழக்கம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் வாசிக்கும் பழக்கம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-16 18:45 GMT

தூத்துக்கடி மாவட்ட மைய நூலகம், தூத்துக்குடி அரிமா சங்கம் மற்றும் வ.உ.சி. கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் இணைந்து பொதுமக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்துக்கு மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாராளக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணி மாவட்ட மைய நூலகத்தில் இருந்து தொடங்கி மார்க்கெட், மாநகராட்சி மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாவட்ட மைய நூலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் சென்ற மாணவ, மாணவிகள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக பதாகைகள் ஏந்தி சென்றனர். மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்