தூத்துக்குடியில்வெள்ளிக்கிழமை மின்தடை
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி அரசடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது. இதனால் மேல அரசடி, கீழஅரசடி, சமத்துவபுரம், தருவைகுளம், பட்டினமருதூர் உப்பள பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை, வாலசமுத்திரம், புதூர்பாண்டியாபுரம், சில்லாநத்தம், வேலாயுதபுரம், சாமிநத்தம், எட்டயபுரம் ரோடு வடபுறம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை தூத்துக்குடி நகர்ப்புற மின்சார வாரிய செயற்பொறியாளர் ராம்குமார் தெரிவித்து உள்ளார்.