தூத்துக்குடியில்போலீஸ் பணிக்கான உடல் திறன் தேர்வு

தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடல் திறன் தேர்வு நடந்தது. இத்தேர்வை ரெயில்வே டி.ஐ.ஜி.விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

Update: 2023-02-09 18:45 GMT

தூத்துக்குடியில் போலீஸ் பணிக்கான உடல் திறன் தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வை ரெயில்வே டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

போலீஸ் தேர்வு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறையில் இரண்டாம் நிலை காவலர் பதவிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக கடந்த 27.11.22 அன்று எழுத்து தேர்வு நடந்தது. இதில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த 931 விண்ணப்பதாரர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 6-ந் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடந்தது. இதில் உயரம், மார்பளவு அளத்தல் உள்ளிட்டவை நடந்தன.

உடல் திறன்

இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் திறன் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழக ரெயில்வே டி.ஐ.ஜி பி.விஜயகுமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் தேர்வுகள் நடந்தன. இதில் நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடந்தன. இந்த பணியில் தூத்துக்குடி தலைமையிடத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 11 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், அமைச்சுப்பணியாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். இவற்றை அவர்கள் நேரடியாக ஆய்வு செய்தனர். நாளை (சனிக்கிழமை) வரை இந்த தேர்வு நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்