தூத்துக்குடியில் ரூ.4 கோடி மதிப்பில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணி தொடக்கம்
தூத்துக்குடியில் ரூ.4 கோடி செலவில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடியில் ரூ.4 கோடி செலவில் நெல் சேமிப்பு கிடங்கு அமைக்கும் பணியை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
சேமிப்பு கிடங்கு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் ரூ.4 கோடியே 18 லட்சம் செலவில் தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகள் தொடங்குவதற்கான பூமி பூஜை நேற்று காலையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மதுரை கோட்ட செயற்பொறியாளர் கே.ஆர்.முருகன், உதவி செயற்பொறியாளர் கே.மயில்வாகணன், உதவி செயற்பொறியாளர் கே.கவியரசன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முத்துலட்சுமி, தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் பொன்னுச்சாமி, சிவில் சப்ளை தாசில்தார் ஜஸ்டின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.