தூத்துக்குடியில் ரெயில் மோதி மூதாட்டி சாவு

தூத்துக்குடியில் ரெயில் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்து போனார்.;

Update: 2023-06-05 18:45 GMT

தூத்துக்குடி அண்ணாநகர் மேற்கு 12-வது தெருவை சேர்ந்தவர் முத்தையா. இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 70). இவர் நேற்று காலையில் ராஜகோபால்நகரில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக சென்றாராம். அப்போது தூத்துக்குடி மீளவிட்டான் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்று உள்ளார். அதே நேரத்தில், தூத்துக்குடியில் இருந்து மணியாச்சி சென்ற ரெயில் முத்துலட்சுமி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்