தூத்துக்குடியில்லாரி மோதி அனல்மின்நிலைய ஊழியர் சாவு

தூத்துக்குடியில் லாரி மோதி அனல்மின்நிலைய ஊழியர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-08-23 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள ஓட்டப்பிடாரம் இந்திராநகரை சேர்ந்தவர் மயிலேறி. இவருடைய மகன் குருசந்த் பிரகாஷ் (வயது 23). இவர் தூத்துக்குடி என்.டி.பி.எல் அனல்மின்நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவ பணி முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் மதுரை பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது, அந்த வழியாக வந்த லாரி மோதிவிட்டு சென்று விட்டது. இதில் பலத்த காயம் அடைந்த குருபிரசாத் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்