தூத்துக்குடியில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் எல்.ஐ.சி. முகவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-05 15:55 GMT

தூத்துக்குடி மாவட்ட எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ராபின்சன் தலைமை தாங்கினார். மூத்த முகவர் அமிர்தலிங்கம் முன்னிலை வகித்தார். சகாயராஜன் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பாலிசிதாரர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி கொடுக்க வேண்டும், பாலிசி கடன் வட்டி விகிதத்தை குறைத்து தர வேண்டும், முகவர்களுக்கு தொடர் கமிஷன் உயர்த்தி கொடுக்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு தொகையை காலதாமதம் இன்றி வழங்க வேண்டும், முகவர்களின் முதல் கமிஷனை குறைக்க கூடாது, ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி, 30-ந் தேதி முகவர் ஓய்வு தினம் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் திரளான முகவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்