தூத்துக்குடியில்பழைய இரும்பு கடையில் ரூ.23 ஆயிரம் திருட்டு
தூத்துக்குடியில் பழைய இரும்பு கடையில் ரூ.23 ஆயிரம் திருடப்பட்டது.;
தூத்துக்குடி அருகே உள்ள சேர்வைக்காரன்மடத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 50). இவர் தூத்துக்குடி மடத்தூர் பைபாஸ் ரோட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று மதியம் இவர் கடையை திறந்து வைத்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சாப்பிட சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்த போது, கடையில் டிராயரில் வைத்து இருந்த ரூ.23 ஆயிரம் ரொக்கப்பணத்தை யாரோ மர்ம ஆசாமி திருடி சென்று விட்டாராம். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.