தூத்துக்குடியில் 9பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம்

தூத்துக்குடியில் 9பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

Update: 2022-11-28 18:45 GMT

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.

இலவச தையல் எந்திரம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் 260 பேர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

பின்னர் கூட்டத்தில் மாவட்டபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் 9 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.

ரூ.25 லட்சம் காசோலை

மேலும், மாப்பிள்ளையூரணி நகரக் கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுவிநியோகத் திட்ட விற்பனையாளராக பணிபுரிந்து கொரோனா தொற்று காரணமாக இறந்த இ.சண்முகராஜ் என்பவர் குடும்பத்துக்கு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்