தூத்துக்குடியில்தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்
தூத்துக்குடியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் வருகிற 6-ந் தேதி தொடங்குகிறது.;
தூத்துக்குடியில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் வருகிற 6-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இது குறித்து மத்திய கதர், கிராம தொழில்கள் இயக்குனர் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விழிப்புணர்வு முகாம்
மத்திய கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய பனைவெல்லம் மற்றும் பனை பொருட்கள் நிறுவனம் சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் வருகிற 6-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த முகாமில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள், பேரூராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு வங்கி அதிகாரிகள், தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இதில் ஆண், பெண் புதிய மற்றும் பழைய தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ளலாம்.
தகுதிகள்
கிராமப்புறங்களில் உள்ள தொழிலை ஊக்குவிக்க அரசு பல மானிய கடன் திட்டங்களை வகுத்து உள்ளது. இந்த கடன் திட்டங்கள் மூலம் அரசு ரூ.25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை மானியம் வழங்குகிறது. அத்துடன் கடன் உதவி பெறவும் வழிகாட்டப்படுகிறது. இந்த முகாமில் வியாபாரம், சேவைத் தொழில், உற்பத்தி தொழில் ஆரம்பிக்கவும், தொழிலை விரிவுபடுத்தவும் இந்த முகாமில் தகவல்களை பெறலாம். முகாமில் வங்கியில் கடன் பெறுவது எப்படி?, வங்கி மேலாளரை அணுகுவது எப்படி?, போன்ற விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. இந்த முகாமில் கலந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 2-ம் நிலை பயிற்சிக்கு தகுதி பெறுவார்கள்.
இதற்கான கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த முகாமில் இலவசமாக பங்கேற்கலாம். முன்பதிவு மற்றும் விவரங்களுக்கு 98401 58943, 78128 50358 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.