தூத்துக்குடியில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் சிக்கினர்

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-07-02 18:45 GMT

தூத்துக்குடியில் தொழிலாளியிடம் செல்போனை வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மோட்டார்சைக்கிள், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

வழிப்பறி

தூத்துக்குடி விசுவபுரம் 4-வது தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சுப்பையா (வயது 31). தச்சுத் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் உருண்டையம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மர்ம நபரகள் 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென சுப்பையாவின் சட்டைப்பையில் வைத்து இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்பிலான செல்போனை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

கைது

இது குறித்து சுப்பையா அளித்த புகாரின் பேரில் வடபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், தாளமுத்துநகர் ஜேசுநகரை சேர்ந்த பட்டாணி துரை மகன் முத்துராஜ் (20), சமீர்வியாஸ் நகரைசேர்ந்த மாரிமுத்து மகன் ராஜபாண்டி (19) மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சுப்பையாவிடம் இருந்து செல்போனை பறித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வழிப்பறி கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்