தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-14 18:45 GMT

சேலம் மாவட்டத்தில் லாட்டரி சீட்டு, கஞ்சா விற்பனைக்கு எதிராக தொடர்ச்சியாக போராடி வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் பெரியசாமி மீது கஞ்சா விற்பனைக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் தூத்துக்குடி மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சிதம்பர நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் இ.சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ஜேம்ஸ் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் மனோஜ், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கார்த்திக், முன்னாள் வாலிபர் சங்க நிர்வாகி ஆறுமுகம், வாலிபர் மற்றும் மாணவர் சங்க நிர்வாகிகள் ஸ்ரீநாத், கிஷோர் நேசமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்