தூத்துக்குடியில்2-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் 2-வது நாளாக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-04-20 18:45 GMT

தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர், 2 பேராசிரியர்கள் தன்னை தாக்கியதாக கூறி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதனை தொடர்ந்து மாணவரை தாக்கிய பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நேற்று 2-வது நாளாக மாணவர் சங்கத்தினர் கல்லூரி முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் தென்பாகம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்