தூத்துக்குடியில்முன்னாள் ராணுவ வீரரிடம் செல்போன் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடியில் முன்னாள் ராணுவ வீரரிடம் செல்போன் பறிப்பு

Update: 2023-04-23 18:45 GMT

கன்னியாகுமரி மாவட்டம் தொடுகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் செல்வின் (வயது 43). முன்னாள் ராணுவ வீரர். சம்பவத்தன்று இவர் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் மடத்தூர் விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், ராபர்ட் செல்வினை வழிமறித்து கத்தியால் குத்தி, அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த ராபர்ட் செல்வின் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்