தூத்துக்குடியில்நூல் வெளியீட்டு விழா
தூத்துக்குடியில் நூல் வெளியீட்டு விழா நடந்தது.
தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவை மற்றும் காட்சில்லா கலைக்கூடம் இணைந்து நூல் வெளியீட்டு விழாவை நடத்தியது. விழாவுக்கு பாதிரியார் செல்வராசு தலைமை தாங்கினார். தொடுவானம் இலக்கிய இதழ் ஆசிாியா் நெல்லை தேவன் வரவேற்று பேசினார். பட்டதாரி ஆசிரியர் தங்கத்துரையரசி எழுதிய நேசக்குளத்தில் நித்தமொரு கல் கவிதை நூலை, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை விசாகன் வெளியிட, கிராமப்புறத் தமிழ்மன்றத் தலைவா் கவிஞா் தேவதாசன் பெற்றுக்கொண்டாா். தூத்துக்குடியை சேர்ந்த லில்லி மலர் நூலை ஆய்வு செய்து பேசினார். தொடர்ந்து சுமைகூலி சின்னஞ்சிறு கதைகள் நூலை எழுத்தாளா் முத்துலாங்குறிச்சி காமராசு வெளியிட, நாசரேத் தோி எழுத்தாளா் கண்ணகுமார விஸ்வரூபன் பெற்றுக் கொண்டார். தூத்துக்குடி தூய மாியன்னை பென்கள் கல்லூாி பேராசிரியர் எழிலரசி, தூத்துக்குடி எழுத்தாளா் முகமதுயூசுப் ஆகியோர் திறனாய்வு செய்து பேசினர். விழாவில் தூத்துக்குடி வருணன், தூத்துக்குடி காதைக்களம் அமைப்பு அன்புராஜ் . தூத்துக்குடி வீதி நாடகக் கலைஞா் சக்திவேல், கார்த்திக், சிவா ஆகியோர் பேசினர். நூல் ஆசிரியர்கள் ஏற்புரை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொடுவானம் கலை இலக்கிய பேரவை மற்றும் காட்சில்லா கலைக்கூடமும் இனைந்து செய்து இருந்தனர்.