தூத்துக்குடியில்வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயற்சி

தூத்துக்குடியில் வாலிபரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்ய முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-17 18:45 GMT

தூத்துக்குடி தாளமுத்துநகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகன் ஆனந்தராஜ் (வயது 26). இவருக்கும், தூத்துக்குடி அம்பேத்கர் நகரை சேர்ந்த சேகர் மகன் சந்திரன் (20) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ஆனந்தராஜ் அம்பேத்கர்நகர் பகுதியில் வந்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சந்திரன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் பொன்ராஜ் மகன் ராஜா செல்வின் (22), சங்கர் மகன் சக்திவேல் (20) மற்றும் சிலர் சேர்ந்து ஆனந்தராஜை வழிமறித்து இரும்பு கம்பி மற்றும் கல்லால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரன், ராஜா செல்வின், சக்திவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்திரன் மீது ஏற்கனவே 4 வழக்குகளும், ராஜாசெல்வின் மீது ஒரு வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்