தூத்துக்குடியில்ஓட்டலில் பணம் திருடிய வாலிபர் சிக்கினார்
தூத்துக்குடியில் ஓட்டலில் பணம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி செல்சினி காலனி 5-வது தெருவை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 36). இவர் அந்த பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் ஓட்டலை பூட்டிவிட்டு சென்றாராம். மறுநாள் ஓட்டலை திறக்க வந்த போது, ஓட்டல் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. ஓட்டலில் மேஜையில் இருந்த ரூ.500 திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து, ஓட்டலில் திருடியதாக 19 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.