தூத்துக்குடியில்பெண்ணை ஸ்குரு டிரைவரால் குத்தி நகை பறிக்க முயன்ற வாலிபர் சிக்கினார்

தூத்துக்குடியில் பெண்ணை ஸ்குரு டிரைவரால் குத்தி நகை பறிக்க வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-11 18:45 GMT

தூத்துக்குடியில் பெண்ணை ஸ்குரு டிரைவரால் குத்தி நகை பறிக்க வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

வீட்டுக்குள்...

தூத்துக்குடி டி.எம்.பி. காலனியை சேர்ந்தவர் ராஜகுரு. இவர் கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி முருகேசுவரி (வயது 26).

இவர் நேற்று மாலையில் வீட்டில் படுத்து உறங்கி கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டுக்குள் நுழைந்தார். அவர் முருகேசுவரியின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது விழித்து கொண்ட முருகேசுவரி சத்தம் போட்டு உள்ளார்.

ஸ்குரு டிரைவர் குத்து

இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்து இருந்த ஸ்குரு டிரைவரால் முருகேசுவரியின் கழுத்தில் குத்தி விட்டு, அவரது செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, முருகேசுவரியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்து வெளியில் தப்பி ஓடிவந்த மர்ம நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் காயம் அடைந்த மர்ம நபர் மற்றும் முருகேசுவரி ஆகியோர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நகை பறிக்க முயன்றவர் நெல்லை மாவட்டம் முக்கூடலை சேர்ந்த தங்கராஜ் மகன் வினோத் (34) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப் பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்