தூத்துக்குடியில், புதன்கிழமை தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில், புதன்கிழமை தி.மு.க அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

Update: 2023-06-20 18:45 GMT

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆணைக்கு இணங்க, தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் நடந்து வரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள், அத்தியாவசிய பொரு்களின் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள தி.மு.க அமைச்சர் செந்தில்பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே எம்.ஜி.ஆர். திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகர, பகுதி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில், அ.தி.மு.க.அமைப்புச் செயலாளர் என். சின்னதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்