தூத்துக்குடியில்பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தூத்துக்குடியில்பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டினர்.

Update: 2023-09-19 18:45 GMT

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இல்லை என்று ஜெயக்குமார் எம்.எல்.ஏ அறிவித்து உள்ளார். இந்த அறிவிப்பை வரவேற்று, அ.தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த திருச்சிற்றம்பலம், டைகர் சிவா ஆகியோர் போஸ்டர் ஒட்டி இருந்தனர். இந்த போஸ்டர் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. நேற்று நடந்த அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில், மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், பா.ஜனதா பற்றி யாரும் பேசக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், நேற்று மாலையில் பா.ஜனதா கட்சியினர் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை என்ற அறிவிப்பை வரவேற்று கீழரதவீதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நிகழ்ச்சியில் பா.ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்